இந்தியாவில் கொரோனா திடீர் உயர்வு; 13,154 பேருக்கு பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. நேற்று 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 82,402 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது 0.24 சதவீதம் ஆகும். கொரோனாவுக்கு 268 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,80,860 ஆக உயர்ந்து உள்ளது. 3 கோடியே 42 லட்சத்து 58 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இது 98.38 சதவீதம் ஆகும்.
கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழலில், இன்று 10 ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பாதிப்புகள் பதிவாகி உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story