இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு மேற்குவங்காள அரசு தடை...!


இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு மேற்குவங்காள அரசு தடை...!
x
தினத்தந்தி 30 Dec 2021 6:47 PM IST (Updated: 30 Dec 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3-ம் தேதி முதல் மேற்குவங்காள அரசு தடை விதித்துள்ளது.

கொல்கத்தா,

இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மேற்குவங்காள அரசு அறிவித்துள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அங்கிருந்து விமானம் மூலம் கொல்கத்தா விமான நிலையம் வரும் பயணிகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இது மேற்குவங்காளத்தில் ஒமைக்ரான் வேகமாக பரவ வழிவகுக்கும். 

ஆகையால், ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மேற்குவங்காள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story