மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறப்பு


மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறப்பு
x
தினத்தந்தி 30 Dec 2021 11:18 PM IST (Updated: 30 Dec 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.

சபரிமலை,

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. கோவில் நடையை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்தார். 14-ந் தேதி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றுது.

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும்.

பிரசித்திப்பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மகரவிளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலமாக 12-ந் தேதி புறப்படும்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் தரிசனத்திற்கு வரும் போது கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Next Story