இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு


இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2021 9:46 AM IST (Updated: 31 Dec 2021 9:59 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரட்டை குழல் துப்பாக்கி போல உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டாவும், ஒமைக்ரானும் தாக்குதல் நடத்தி வருகின்றன. பிரான்சில் தொடர்ந்து 2 நாட்கள் தினமும் 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது.  நேற்று 961 ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,270ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றில் இருந்து 374 பேர் குணமடைந்த நிலையில் 896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  டெல்லி - 450, மராட்டியம் - 320, கேரளா -109, குஜராத் -97, ராஜஸ்தான்-  69, 

அரியானா - 14, மேற்கு வங்கம் - 11, மத்திய பிரதேசம் - 9, ஒடிசா - 14, ஆந்திரா - 16, உத்தரகாண்ட் - 4, சண்டிகர் - 3, காஷ்மீர் - 3, உ.பி., அந்தமான் - தலா 2 பேருக்கு,  கோவா, இமாச்சல பிரதேசம், லடாக், பஞ்சாப், மணிப்பூரில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Next Story