மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 341 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 341 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 31 Dec 2021 10:21 AM IST (Updated: 31 Dec 2021 10:21 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 341 புள்ளிகள் உயர்ந்து உள்ளது.



மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு லாப நோக்குடன் காணப்பட்டது.  அதன் மதிப்பு 341.30 புள்ளிகள் அல்லது 0.59 சதவீதம் உயர்ந்து 58,135.62 புள்ளிகளாக உள்ளது.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 99.80 புள்ளிகள் அல்லது 0.58 சதவீதம் உயர்ந்து 17,303.75 புள்ளிகளாக உள்ளது.

நிப்டியில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டைட்டன் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை லாபத்துடன் காணப்படுகிறது.

நடப்பு ஆண்டின் இறுதி நாளான இன்று பங்கு சந்தைகள் லாப நோக்குடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story