ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு அமல் தள்ளி வைப்பு
ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 5% லிருந்து 12% ஆக உயர்த்தியதை அமல்படுத்துவது ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடெல்லி,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்,ஜிஎஸ்டி கவுன்சிலின் 46-வது கூட்டம் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில்,ஜவுளி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில், ஜவுளிப் பொருட்களின் மீதான 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமான ஜிஎஸ்டி வரி உயர்வை தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளதாக இமாச்சலப் பிரதேச தொழில்துறை மந்திரி பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார். அதே சமயம்,இந்த விசயம் தொடர்பாக பிப்ரவரி 2022 இல் கவுன்சில் அதன் அடுத்த கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதுடெல்லியில் பிற்பகல் 3:00 மணிக்கு செய்தியாளர் சந்திக்க உள்ளார்.
Related Tags :
Next Story