ஒமைக்ரான் அச்சுறுத்தல்; மும்பையில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு


ஒமைக்ரான் அச்சுறுத்தல்;  மும்பையில் மீண்டும்  கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2021 2:46 PM IST (Updated: 31 Dec 2021 2:46 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மும்பை,

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாராட்டிய மாநில தலைநகர்  மும்பையிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், மும்பை போலீசார் இன்று வெளியிட்ட கட்டுப்பாடுகளில்  கூறியிருப்பதாவது;-  

கடற்கரைகள், திறந்த வெளி மைதானங்கள், கடல் முகங்கள்,  பூங்காக்கள், போன்ற பொது இடங்களுக்கு வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது. அதேபோல், பொது மக்கள் அதிக அளவில் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. 

ஒமைக்ரான் பரவலால் மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் அச்சுறுத்தல் உள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.  மும்பையில்  நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 3,671-  ஆக பதிவானது. ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 190- ஆக பதிவானது. 


Next Story