உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி பணம் நகை பறித்த பெண் கைது
திருச்சூர் அருகே முகநூல் மூலம் அறிமுகமான வாலிபரிடம் பணம் நகை கொள்ளையடித்த இளம்பெண்ணை திருச்சூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சூர்,
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கரை பகுதியில் வசிப்பவர் சிந்து (37). இவருக்கு முகநூல் மூலம் பாலக்காடு நகரில் கல்மண்டபம் என்ற இடத்தில் வசிக்கும் ராஜீவ் என்பவர் அறிமுகமாகி, இவர்கள் அடிக்கடி பேசி வந்தார்கள். கடந்த மார்ச் மாதம் அந்த இளம்பெண் ராஜீவை திருச்சூரில் உள்ள தனது வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இதையொட்டி ராஜீவ் திருச்சூர் நகரில் உள்ள சிந்துவின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்கள் இரண்டு முறை மகிழ்ச்சியாக இருந்துள்ளார்கள். அந்த நிகழ்ச்சிகளை சிந்து ஏற்கனவே முடிவு செய்தபடி தனது செல்போனில் காட்சிகளை படம்பிடித்து வைத்திருந்தார். அங்கு சுமார் 3 மணி நேரம் இருந்த வாலிபர் புறப்பட தயாரானார்.
அப்போது அந்த இளம்பெண் தனது செல்போனில் வைத்திருந்த காட்சிகளை காட்டி மரியாதையாக நகை பணத்தை கொடு இல்லை என்றால் இதை ஊடகங்கள் மூலம் அனுப்பியும் உனது வீட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பியும் அவமானப்படுத்துவேன் என கூறி மிரட்டினார்.
பயந்துபோன வாலிபர் தனது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலி மற்றும் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாயும் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொடுத்தார். பின்பு அங்கிருந்து வாலிபர் சென்று விட்டார் .
பின்பு மீண்டும் பத்து நாள் கழித்து அந்த வாலிபரை அழைத்த சிந்து உங்களிடம் பறித்து வைத்த நகை பணம் இவைகளை திருப்பி கொடுக்கிறேன் வீட்டுக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார். அதை நம்பி வாலிபர் மீண்டும் சிந்துவின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு சிந்து மீண்டும் 10 லட்சம் வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். தருகிறேன் என கூறி விட்டு வெளியே வந்த வாலிபர் கிழக்கு திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டிலிருந்த சிந்துவை கைது செய்து நகை பணங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் சிந்து பல வாலிபர்களிடம் இதே முறையில் பணம் பரித்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story