ஒமைக்ரான் அதிகரிப்பு; மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் கடிதம்
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் சற்று காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து ஓரளவு நிம்மதியாக இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்ப்பலி மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும், வேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாற்றம் வைரஸாக இருப்பதால் இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால், பரிசோதனைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு மநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில், “ காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், உடல் வலி, வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு, களைப்பு போன்ற அறிகுறிகள் உள்ளவர்களை கொரோனா சந்தேக நோயாளிகளாக கருதி கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளிலும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் சற்று காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்” எனக்கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story