புதுச்சேரியில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்...!


புதுச்சேரியில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்...!
x
தினத்தந்தி 31 Dec 2021 11:28 PM IST (Updated: 31 Dec 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

புதுச்சேரி,

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனா, ஒமைக்ரான் காரணமாக புத்தாண்டு கெண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அரசு அனுமதி வழங்கியது. இதனால் புதுச்சேரியில் 2022 புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது.

புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்ட கடற்கரை சாலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று பிற்பகல் முதலே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வரத்தொடங்கினர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்துள்ளது. 

கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் கொண்டாடி மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளனர்.

கடற்கரை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சட்டம் ஒழுங்கு போலீஸார், போக்குவரத்து போலீஸார், ஐஆர்பிஎன், ஊர்க்காவல் படையினர் என சுமார் 2000 போலீசார், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களும் பாதுகாப்பு பாணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story