ராஜஸ்தானில் புதிதாக 52 பேருக்கு ஒமைக்ரான்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Jan 2022 4:46 PM GMT (Updated: 2022-01-01T22:16:06+05:30)

ராஜஸ்தானில் புதிதாக 52 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர்,

இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமைக்ரான் பரவலில் வேகம் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானில் புதிதாக  52 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள். நான்கு பேர் வெளிநாட்டு பயணிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள். 12 பேர் பிற மாநிலங்களிலிருந்து திரும்பியவர்கள்.

தற்போது வரை மாநிலத்தில் 121 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 61 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் 963 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story