பெங்களூரு: கார், டேக்சி, ஆட்டோக்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் - மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு சிபாரிசு


பெங்களூரு: கார், டேக்சி, ஆட்டோக்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் - மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு சிபாரிசு
x
தினத்தந்தி 2 Jan 2022 7:20 AM GMT (Updated: 2 Jan 2022 7:20 AM GMT)

பெங்களூரு நகரில் கொரோனா பரவலை தடுக்க கார், டேக்சி, ஆட்டோக்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயமாக்க மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு சிபாரிசு தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பை தடுக்க பஸ், டேக்சி, ஆட்டோக்களில் பயணம் செய்வோர் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தும்படி பெங்களூரு மாநராட்சி மருத்துவக்குழு கர்நாடக அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது.

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறபித்துள்ளது. இந்த உத்தரவு கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிப்பில் அரசு குறிப்பிட்டுள்ளது. 

இந்த நிலையில் பெங்களூரு நகரில் கொரோனா தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் (ஜனவரி 1-ந்தேதி) நிலவரப்படி பெங்களூரு நகரில் தொற்று பாதிப்பு 800-ஆக இருந்தது, நேற்று திடீரென தொற்று பாதிப்பு 1,300-ஆக அதிகரித்துள்ளது. இதனால், தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகள் மேற்கொள்ளவேண்டும் என்று பெங்களூரு மாநகர மருத்துவ வல்லுனர் குழு கர்நாடக அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. அதன்படி, மும்மை மாதிரியில், ஆட்டோ, டேக்சி, பஸ்களில் பயணிப்போர் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.

பெங்களூரு நகரில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவாமல் தடுக்க சுற்றுலாப் பயணிகள் இரணடு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும். அத்துடன் தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் கட்டாயம் வைத்தருக்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை உடனே அமல்படுத்தும்படி அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. அதேபோல, குறிப்பிட்ட பகுதியில் இரண்டு சதவிகதம் பேருக்கு மேல் தொற்று பாதிப்புள்ள இடங்களை ஆரஞ்சு அலர்ட் பகுதியாகவும், 3 சதவிதம் பேருக்கு தொற்று பாதிப்புள்ள பகுதிகளை ரெட் அலர்ட் பகுதிகளாக அறிவிக்கவும் மாநகராட்சி மருத்துவக்குழு அரசுக்கு செய்துள்ள சிபாரிசில் குறிப்பிட்டுள்ளது.

Next Story