எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக்கொலை

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 2 Jan 2022 12:51 PM GMT (Updated: 2022-01-02T18:21:48+05:30)

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரரின் உடலை எடுத்துச்செல்லுமாறு அந்நாட்டை வலியுறுத்தியுள்ளோம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர், 

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரரின் உடலை எடுத்துச்செல்லுமாறு அந்நாட்டை வலியுறுத்தியுள்ளோம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராணுவ காலாட்படை பிரிவின் மேஜர் ஜெனரல் பென்தர்கள் கூறியதாவது: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கெரன் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர், இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றார். இதனையடுத்து, இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் அந்த வீரர் உயிரிழந்தார். 

உயிரிழந்த வீரர் முகமது ஷபீர் மாலிக் என தெரியவந்துள்ளது. இறந்த வீரரின் உடல் கைப்பற்றப்பட்டது. ஏகே ரக துப்பாக்கி, வெடிமருந்து, கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  உயிரிழந்த வீரரின் உடலை திரும்ப எடுத்துச்செல்லுமாறு பாகிஸ்தான் ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளோம்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story