கொரோனா பரவல் அதிகரிப்பு: கர்நாடகாவில் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து நாளை முக்கிய முடிவு


கொரோனா பரவல் அதிகரிப்பு: கர்நாடகாவில் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து நாளை முக்கிய முடிவு
x
தினத்தந்தி 3 Jan 2022 6:46 AM GMT (Updated: 3 Jan 2022 6:46 AM GMT)

கர்நாடகாவில் கொரோனா திடீரென அதிகரித்ததால் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து நாளை முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

பெங்களூரு, 

கர்நாடகாவில் கொரோனா 3-வது அலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால், ஊரங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது குறித்து நாளை நடக்க உள்ள மருத்துவ நிபுணர் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்த அறிவிக்கப்படும் என்று முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

கர்நாடகாவில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்ததால் அரசு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது. இந்த நிலையில் பெங்களூரு நகரில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியது. கொரோனா தொற்று பவரலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்தாலாமா? என கர்நாடக அரசு திட்டமிட்டு வந்தது.

இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

பெங்களூரு நகரில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளது. தொற்று பரவலை தடுக்க ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. நகரில் அதிகரித்து வரும் தொற்று பவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது குறித்து நாளை (செவ்வாய் கிழமை) நடக்க உள்ள நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்படும். 

அப்போது எந்த மாதிரியான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். இதை தொடர்ந்து 6-ந் தேதி (வியாழக்கிழமை) மந்திரி சபை கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்துவது குறித்து அனுமதி பெற்று அறிவிக்கப்புடும். 

இவ்வாறு அவர் கூறினார்.

ஊரடங்கு தீவிரப்படுத்துவது குறித்து நிபுணர் குழு அரசுக்கு 3 வித கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி சிபாரிசு செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- 

பெங்களூரு நகரில் நேற்றைய நிலவரப்படி தொற்று பாதிப்பு 1.0 சதவிகிமாக இருந்தது. இன்றைய நிலவரப்படி தொற்று பாதிப்பு 2.3 சதவிகிமாக அதிகரித்துள்ளது. 5 சதவிகிமாக அதிகரித்தால் முழு ஊரங்கு உத்தரவை அமல்படுத்தவேண்டும். 1 தவிகித பாதிப்பு ஏற்பட்டால் மஞ்சள் அலர்ட்டும், தொற்று பாதிப்பு 2 சதிவிகிதமாக இருந்தால் ஆரஞ்சு அலர்ட்டும், 3 சதவிகதத்திற்கு அதிகமாக தொற்று பாதித்தால் சிவப்பு அலர்ட்டாக அறிவிக்கவேண்டும் என்று நிபுணர் குழு அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. 

நிபுணர் குழுவின் சிபாரின் பேரில் தற்போது தொற்று பாதிப்பு பெங்களூரு நகரில் ஆரஞ்சு அலர்ட்டை விட அதிகரித்துள்ளது. எனவே, தொற்று பரவாமல் தடுக்க ஊரங்கு உத்தரவை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story