கேரளாவில் ஒரே நாளில் 29 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி


கேரளாவில் ஒரே நாளில் 29 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
x
தினத்தந்தி 3 Jan 2022 12:59 PM GMT (Updated: 2022-01-03T18:29:01+05:30)

கோளாவில் இது வரை 181 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில்  இன்று ஒரே நாளில் 29 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதார துறை மந்திரி தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

மாவட்ட அளவில்  திருவனந்தபுரம் - 10, ஆலப்புழை - 7, திருச்சூர் 6, மலப்புரம் - 6 என மொத்தம் 29 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

கோளாவில் இது வரை 181 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், ஒமைக்ரான் பாதித்தவர்களில் 42 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 139 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story