டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிப்பு


டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2022 9:14 AM GMT (Updated: 4 Jan 2022 9:14 AM GMT)

டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு விகிதம் 6 சதவீதத்தை தாண்டியுள்ளது. கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் மீண்டும் வார இறுதி நாட்களில்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது;-

"டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு  அமல்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுத்துள்ளது. 
அத்தியாவசிய பணிகள் தவிர பிற அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும். 

பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்க பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார். 


Next Story