மணிப்பூர்: ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்!


மணிப்பூர்: ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி  திட்டங்கள் தொடக்கம்!
x
தினத்தந்தி 4 Jan 2022 9:52 AM GMT (Updated: 4 Jan 2022 9:52 AM GMT)

பிரதமர் மோடி இன்று வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் திரிபுராவுக்கு சென்றார்.

அகர்தலா,

பிரதமர் மோடி இன்று வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் திரிபுராவுக்கு சென்றார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

மணிப்பூரில் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி  திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தலைநகர் இம்பாலில் ரூ.1850 கோடியில் 13 வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும், அங்கு புதுப்பிக்கப்பட்ட கோவிந்தா ஜி கோயிலையும் திறந்து வைத்தார்.

மேலும், திரிபுரா மாநிலத்தில் தலைநகர் அகர்தலாவில் மகராஜா பீர் பிக்ரம் விமானநிலையத்தில் ரூ.450 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டிடத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார். இது 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய நவீன கட்டிடம் ஆகும். முதல்-மந்திரி திரிபுரா கிராம சம்ரிதி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.

அதன்பின் அந்த புதிய கட்டிடத்தை பிரதமர் பார்வையிட்டார். அதன்பின் அவர் ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது, “டெல்லியை மணிப்பூருக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளேன்.

வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய உந்துசக்தியாக மாறும்.

நாட்டின் வளர்ச்சிப் பாதையின் முக்கிய ஆதாரமாக மணிப்பூர்  இருக்கும்” என்று பேசினார்.

Next Story