ஜம்மு- காஷ்மீர்: பல்கலைக்கழகத்தில் 4 நாட்களில் 187 மாணவர்களுக்கு தொற்று..!


ஜம்மு- காஷ்மீர்: பல்கலைக்கழகத்தில் 4 நாட்களில் 187 மாணவர்களுக்கு தொற்று..!
x
தினத்தந்தி 4 Jan 2022 9:49 PM GMT (Updated: 2022-01-05T03:19:25+05:30)

ஜம்மு- காஷ்மீரிலுள்ள பல்கலைக்கழகத்தில் 4 நாட்களில் 187 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஜம்மு- காஷ்மீர்,

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்னம் உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தில் கடந்த நான்கு நாட்களில் 187 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழகம் தற்போது மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கவிருந்த பல்கலைக்கழகத்தின் முக்கியத் தேர்வுகள் மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.


Next Story