குடும்ப பிரச்சினை: குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


குடும்ப பிரச்சினை: குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 5 Jan 2022 7:45 AM GMT (Updated: 2022-01-05T13:15:04+05:30)

குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காந்திபுரம், 

குஜராத் மாநிலம் டாஹத் மாவட்டம் தேவ்ஹத் பரியா தாலுகா திகவாடி கிராமத்தை சேர்ந்தவர் மினக்‌ஷி ஹரிஜங் (30). இவருக்கு திருமணமாகி 7 வயதில் மகளும், 4 வயதில் மகளும் உள்ளனர். 

இதற்கிடையில், மினக்‌ஷிக்கும் அவரது மாமனானார்,மாமியாருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு மினக்‌ஷிக்கும் அவரது மாமனானார்,மாமியாருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று அதிகாலை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு விறகு எடுக்கச்செல்வதாக கூறிவிட்டு மினக்‌ஷி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

கிராமத்திற்கு வெளியே உள்ள வயல்பகுதிக்கு சென்று அவர் தனது இரண்டு குழந்தைகளையும் அங்கு இருந்த கிணற்றில் தள்ளிவிட்டு தானம் குதித்துள்ளார். இதில், தண்ணீர் மூழ்கி மினக்‌ஷியும் அவரின் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விறகு எடுப்பதாக கூறிவிட்டு சென்ற மினக்‌ஷி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவர்களை தேடும்பணியில் ஈடுபட்டனர். அப்போது, வயல் பகுதியில் உள்ள கிணற்றின் அருகே மினக்‌ஷியின் செல்போன், செருப்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிணற்றை பார்த்துள்ளனர். அங்கு மினக்‌ஷியும் அவரின் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இது  குறித்து போலீசார், மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மினக்‌ஷி மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story