பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு


பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2022 11:44 AM GMT (Updated: 2022-01-05T21:52:08+05:30)

40 பயணிகளுடன் சென்ற பேருந்து லாரியுடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்கு உள்ளானது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டத்தில் இன்று காலையில் 40 பயணிகளுடன் சென்ற  பேருந்தும், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. கோவிந்த்பூர்-சாகிப்கஞ்ச் நெடுஞ்சாலையில் பாதர்கோலா கிராமத்தின் அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது.  

இந்த கோர விபத்தில்  பேருந்தில் பயணம் செய்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  26 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Next Story