பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு


பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2022 7:40 AM GMT (Updated: 2022-01-07T13:57:22+05:30)

கொரோனா பரவல் அதிகரிப்பால் பெங்களூருவில் இன்று இரவு முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

பெங்களூரு,

பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்த நிலையில், பற்றொரு புறம் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் பீதி அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால்  இன்று இரவு 8 மணி முதல் பெங்களூரு நகரில் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்கி உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தொற்று பரவல் அதிகரிப்பால் பெங்களூருவில் இன்று இரவு 8 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சலூன், அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், மால்கள் திறக்க அனுமதி இல்லை. உள் அரங்குகளில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் 100 பேரும், திறந்த வெளியில் நடக்கும் திருமணத்தில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

நகர பேருந்து சேவை, ஆட்டோ, வாடகை கார் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவை ஓரு சில மாற்றங்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவச பொருட்கள் விற்பனை, பழம், காய்கறி, பால், மருந்தகம், ஆஸ்பத்திரி,, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்ககம் போல் இயங்கும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊரடங்கின் போது மது விற்பனை செய்வது குறித்து இன்று மாலை அரசு முக்கிய முடிவு எடுத்து அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடதக்கது

Next Story