பூஸ்டர் டோசுக்கு புதிதாக பதிவு செய்ய தேவையில்லை; மத்திய அரசு


பூஸ்டர் டோசுக்கு புதிதாக பதிவு செய்ய தேவையில்லை; மத்திய அரசு
x
தினத்தந்தி 7 Jan 2022 4:28 PM GMT (Updated: 7 Jan 2022 4:28 PM GMT)

பூஸ்டர் டோஸ் போட்டு கொள்பவர்கள் புதிதாக பதிவு செய்ய தேவையில்லை என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன.  இந்த நிலையில், கூடுதலாக பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் போடுவது பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பூஸ்டர் டோசுக்கு புதிதாக பதிவு செய்ய தேவையில்லை.

2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் நேரடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.  தடுப்பூசிக்கான காலஅட்டவணை நாளை வெளியிடப்படும்.

ஆன்லைன் வழியே பதிவு செய்வதற்கான வசதி நாளை மாலை தொடங்கும்.  நேரடியாக மையத்திலேயே பதிவு செய்து கொள்ளும் முறை வருகிற 10ந்தேதி தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story