ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2022 9:35 AM GMT (Updated: 2022-01-09T15:05:16+05:30)

ஜம்மு காஷ்மீரில்வரும் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இரு நாட்களுக்கு கனமழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு  மையம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன்படி, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் முன் எப்போதும் இல்லாத வகையில் பனிப்பொழிவு காணப்படுகிறது. வீடுகளும், சாலைகளும் பனியால் மூடப்பட்டு வெண்பட்டு தரித்தது போன்று காட்சியளிக்கின்றது. ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பனியால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இதன் காரணமாக எண்ணற்ற வாகனங்கள் அப்பகுதியில் அணிவகுத்து நிற்கின்றன. சாலைகளில் குவிந்து இருக்கும் பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடும் பனியால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story