கொரோனா சூழல்; மாநில சுகாதார மந்திரிகளுடன் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை


கொரோனா சூழல்; மாநில சுகாதார மந்திரிகளுடன் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 9 Jan 2022 12:23 PM GMT (Updated: 2022-01-09T17:53:50+05:30)

கொரோனா சூழல் பற்றி மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதார மந்திரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.புதுடெல்லி,


நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.  இதேபோன்று, ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு வருகிறது.  இந்தியாவில் ஒமைக்ரான் அலை அடுத்த மாதம் உச்சம் அடையும் என அமெரிக்க சுகாதார நிபுணர் எச்சரிக்கை தெரிவித்து உள்ளார்.

இதனை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கி உள்ளது.

இதன்படி, அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் என மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், கொரோனா சூழல் பற்றி மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்த உள்ளார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
Next Story