செல்போனில் இருப்பிடத்தை அனுப்பி வைத்துவிட்டு திருமணமான பெண் காதலனுடன் தற்கொலை..!


செல்போனில் இருப்பிடத்தை அனுப்பி வைத்துவிட்டு திருமணமான பெண் காதலனுடன் தற்கொலை..!
x
தினத்தந்தி 9 Jan 2022 5:42 PM GMT (Updated: 2022-01-09T23:12:21+05:30)

திருமணமான பெண் ஒருவர் காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான 6 மாதத்தில் காதலனுடன் தூக்கு போட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள பெண் ஒருவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அதன்பின் அவர் தன்னுடைய கணவன் வீட்டில் வசிக்காமல் தன்னுடைய உறவினர் அத்தை ஒருவருடைய வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அவரது அத்தை வீட்டிற்கு அருகில் லோகேஷ் மீனா என்ற ஒருவர் வசித்து வந்துள்ளார். 19 வயதேயாகும் அந்தப் பெண்ணுக்கும் லோகேசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த இவர்கள் நேற்று (சனிக்கிழமை) மாலை பதேபூர்-சலாசர் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ஒரு வயலில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, லோகேஷ் தனது இருப்பிடத்தை செல்போனில் தனது உறவினர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். இருப்பிடத்தின் அடிப்படையில், குடும்பத்தினர் தேடியதில் அவர்கள் இருவரையும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் இருவரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து பதேபூர்-சதார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story