கொரோனா அதிகரிப்பு: உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகள் மூடல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Jan 2022 5:05 AM GMT (Updated: 10 Jan 2022 5:05 AM GMT)

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உத்தரப்பிரதேச அரசு பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது.

லக்னோ,

நாட்டில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நாளுக்குநாள் அதிகரித்து  வரும் கொரோனா பரவல் காரணமாக அம்மாநில அரசு பள்ளிகளுக்கான நேரடி வகுப்புகளை டிசம்பர் 16 வரை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

தற்போது ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கும் தொடரும் என்று மாநில அரசு கூறியுள்ளது.

இந்த தகவலை மாநில தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story