டெல்லியில் கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்தது


டெல்லியில் கொரோனா பாதிப்பு நேற்றை விட  சற்று குறைந்தது
x
தினத்தந்தி 10 Jan 2022 2:11 PM GMT (Updated: 10 Jan 2022 2:11 PM GMT)

டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வந்தது. ஒமைக்ரான் பரவலால் கொரோனா பாதிப்பின் வேகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. இதனால், டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுக்ள் விதிக்கப்பட்டன. பார்கள் மூடப்பட்டுள்ளன. உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து மிரட்டி வந்த நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக டெல்லியில் கொரோனா பாதிப்பு லேசாக குறைந்துள்ளது. டெல்லி சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  டெல்லியில் மேலும் 19,166- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்றில் இருந்து 14,076- பேர் குணம் அடைந்துள்ளனர்.கொரோனா பாதிப்புக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 65,806- ஆக உயர்ந்துள்ளது. 

டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,177- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 76,670- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 


Next Story