கர்நாடகா: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Jan 2022 7:36 AM GMT (Updated: 11 Jan 2022 7:36 AM GMT)

கல்வித் துறை மந்திரி பி.சி. நாகேஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு நகரில் கொரேனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெங்களூரு நகரில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, 9 ஆயிரத்து 221-ஆக இருந்தது. 

கடந்த 10 நாட்களாக தொற்று பாரவல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகளை கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்க கல்வித்துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று கல்வித் துறை மந்திரி பி.சி. நாகேஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- 

பெங்களூரு நகரில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளை பாதுகாக்க அரசு தேவையான நடவடிக்கை எடுத்துவருகிறது. 

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story