கர்நாடகா: ஒரே விடுதியில் 68 மாணவிகளுக்கு கொரோனா!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Jan 2022 8:07 AM GMT (Updated: 2022-01-11T13:37:35+05:30)

பள்ளி விடுதியில் 68 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெலகாவி: 

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் டவுனில் கித்தூர் சன்னம்மா சைனிக் என்ற ராணுவ பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் மராட்டியம், உத்தர பிரதேசம் உள்பட சில மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கு அருகே உள்ள விடுதியில் மாணவிகள் தங்கி உள்ளனர். 

இந்த பள்ளியில் படித்து வரும் சில மாணவிளுக்கு திடீரென உடல்நலக்குறைவு உண்டானது. இதனால் விடுதியில் தங்கி உள்ள 102 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 68 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

இதுபோல அந்த பள்ளியில் வேலை செய்து வரும் 10 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அந்த பள்ளிக்கும், விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டு சானிடைசர் திரவம் தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story