மகர சங்கராந்தி; கங்கையில் புனித நீராட பக்தர்களுக்கு தடை


மகர சங்கராந்தி; கங்கையில் புனித நீராட பக்தர்களுக்கு தடை
x
தினத்தந்தி 11 Jan 2022 10:31 AM GMT (Updated: 11 Jan 2022 10:31 AM GMT)

இந்தியாவில் ஒமைக்ரான் பரவியுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஹரித்வார், 

கொரோனா தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மகர சங்கராந்தி அன்று கங்கை நதியில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஹரித்வார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
ஒமைக்ரான் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு ஜனவரி 14-ஆம் தேதி மகர சங்கராந்தி அன்று கங்கை நதியில் புனித நீராடலுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால்  277 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஒரே நாளில்  400- க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது.இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,461- ஆக உயர்ந்துள்ளது. 


Next Story