கர்நாடக ஆலையில் ரசாயன கசிவு; 20 பேருக்கு சிகிச்சை


கர்நாடக ஆலையில் ரசாயன கசிவு; 20 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 11 Jan 2022 11:16 AM GMT (Updated: 2022-01-11T16:46:45+05:30)

கர்நாடகாவில் மீன் பதப்படுத்தும் ஆலையில் ரசாயன கசிவை தொடர்ந்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பைக்கம்படி என்ற பகுதியில் மீன் பதப்படுத்தும் ஆலை உள்ளது.  இதில், 80 பேர் வரை இன்று பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்த நிலையில், ஆலையில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டு உள்ளது.

இதனால், பணியாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து பணியாளர்கள் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த கசிவுக்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை.  இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என மங்களூரு காவல் ஆணையாளர் என். சசிகுமார் கூறியுள்ளார்.


Next Story