உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி போட்டி இல்லை..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Jan 2022 6:53 PM GMT (Updated: 11 Jan 2022 6:53 PM GMT)

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி போட்டி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ, 

உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 

இந்நிலையில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி போட்டியிடமாட்டார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சி.மிஸ்ரா கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால், கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மாயாவதி பாடுபடுவார். தேர்தலில் போட்டியிடமாட்டார். இது கட்சியின் தற்போதைய முடிவு. எதிர்கால முடிவை மாயாவதியே எடுப்பார். அதுபோல், நானும் போட்டியிடமாட்டேன். தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்று மாயாவதி முதல்-மந்திரி ஆவார்” என்று அவர் கூறினார்.


Next Story