டெல்லியில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 26.22 % ஆக உயர்வு


டெல்லியில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 26.22 % ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 Jan 2022 2:30 PM GMT (Updated: 12 Jan 2022 2:30 PM GMT)

டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தொற்று பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து மக்களை கலங்க வைத்துள்ளது.  தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது.  தொற்று பாதிப்பு அதிகரிப்பால் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும்  தொற்று பரவல் அதிகரித்த வண்ணமே உள்ளது. 

கொரோனா பரவலின் மூன்றாம் அலை இன்னும் உச்சத்தை தொடாத நிலையில் இருப்பதால் அடுத்து வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.  டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- 

டெல்லியில் கடந்த  24 மணி நேரத்தில் 27,561 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில்  40 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 87,445- ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 26.22 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.  டெல்லியில் கொரோனா பாதிப்பைக் கண்டறிய 1,05,102- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 


Next Story