ஒமைக்ரான் பாதிப்பால் உலகம் முழுவதும் 115 பேர் உயிரிழப்பு; மத்திய சுகாதாரத்துறை


ஒமைக்ரான் பாதிப்பால் உலகம் முழுவதும் 115 பேர் உயிரிழப்பு;  மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 12 Jan 2022 3:25 PM GMT (Updated: 12 Jan 2022 3:25 PM GMT)

டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரானுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் குறைவாகவே உள்ளது.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை  இணை செயலர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,55,319 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம், மேற்கு வங்காளம், டெல்லி, தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் குஜராத் ஆகியவை முன்னணியில் உள்ளன. ஒமைக்ரான் பாதிப்பால் உலகம் முழுவதும் 115- பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி டெல்டாவை விட ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, டென்மார்க் ஆகிய நாடுகளில் கிடைத்த தரவுகளின் படி  டெல்டாவுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அபாயம் குறைவாக உள்ளது.  

ஏழு நாட்கள் ஆன பிறகு லேசான பாதிப்பு உள்ளவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது, எந்தவித அவசர அவசியமில்லாத நிலையில் சோதனைகள் எதுவும் தேவையில்லை” என்றார்.


Next Story