தேசிய செய்திகள்

சினிமா பாணியில் திருடனை துரத்தி பிடித்த போலீஸ் - வைரலாகும் வீடியோ..! + "||" + The police who caught the thief in cinema style - viral video ..!

சினிமா பாணியில் திருடனை துரத்தி பிடித்த போலீஸ் - வைரலாகும் வீடியோ..!

சினிமா பாணியில் திருடனை துரத்தி பிடித்த போலீஸ் - வைரலாகும் வீடியோ..!
கர்நாடகாவில் சினிமா பாணியில் திருடனை போலீஸ் துரத்தி பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
மங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூருவில் செல்போன் திருடிக்கொண்டு ஓடிய திருடனை போலீஸ் ஒருவர் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

நேற்று மங்களூருவில் நேரு மைதானம் அருகே சில திருடர்கள் ஒரு நபரின் செல்போனை திருடிவிட்டு தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து காரில் இருந்து இறங்கிய போலீசார் சினிமா பாணியில் திருடர்களைத் துரத்தத் தொடங்கினர்.

உதவி எஸ்.ஐ வருண் அல்வா நீண்ட தூர துரத்தலுக்குப் பிறகு அந்த திருடனைப் பிடித்தார். இதையடுத்து தரையில் திருடனை கிடத்தி அவன் மேல் உட்கார்ந்த்து தப்பிச் செல்லாமல் பிடித்தார். சிறிது நேரம் கழித்து, மற்ற போலீசார்கள் அங்கு வந்து திருடனை அழைத்துச் சென்றனர்.

அவனிடமிருந்து திருடப்பட்ட செல்போன் மீட்கப்பட்டது. மேலும் அவனது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பாண்டேஷ்வர் போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எஸ்.ஐ வருண் திருடனை துரத்திச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரை பாராட்டிய மாநகர ஆணையர் சசிகுமார் காவல் துறை சார்பில் எஸ்.ஐ வருணுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பா பேத்தி தூக்கிட்டு தற்கொலை
பா.ஜ.க மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பாவின் பேத்தி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2. கர்நாடகாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு....!
கர்நாடகாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
3. காங்கிரஸ் தன்னைத்தானே அழிந்துக்கொண்டிருக்கிறது - காங். மூத்த தலைவர் பரபரப்பு கருத்து
காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக்கொணிடிருக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
4. கர்நாடகா: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு கொரோனா
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா தொற்று....!
கர்நாடகாவில் இன்று மேலும் 48,905 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.