தேசிய செய்திகள்

புதுவையில் மின்கட்டணம் யூனிட்டுக்கு 35 காசு உயர்வு + "||" + 35 per unit increase in electricity tariff in Puducherry

புதுவையில் மின்கட்டணம் யூனிட்டுக்கு 35 காசு உயர்வு

புதுவையில் மின்கட்டணம் யூனிட்டுக்கு 35 காசு உயர்வு
புதுவையில் மின்கட்டணம் யூனிட்டுக்கு 35 காசு உயர்த்தப்பட உள்ளது.
புதுச்சேரி,

புதுவையில்  2022-23ம் ஆண்டுக்கான மின்கட்டணத்தை உயர்த்த மின்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன்படி வீட்டு உபயோகத்துக்கான மின்சாரம் உயர்த்தப்படுகிறது.

அதாவது 100 யூனிட் வரை வீடுகளுக்கான மின்சார கட்டணம் இதுவரை யூனிட்டுக்கு ரூ.1.55 வசூலிக்கப்பட்டு வந்தது. அந்த கட்டணம் இனிமேல் ரூ.1.90 ஆக வசூலிக்கப்பட உள்ளது. அதாவது யூனிட்டுக்கு 35 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதேபோல் உயர் மின் அழுத்த தொழிலகங்களுக்கான மின்கட்டணம், அரசு தண்ணீர் தொட்டிகளுக்கான மின்கட்டணமானது யூனிட் ஒன்றுக்கு 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் முந்தைய கால பற்றாக்குறையை வசூலிக்க தற்போது அனைத்து நுகர்வோர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வரும் ஒழுங்குமுறை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் 5 சதவீத தொகை, வருகிற நிதியாண்டிலும் அனைத்து நுகர்வோர்களுக்கும் தொடர உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்கட்டண உயர்வு வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5,488 ஆக உயர்வு..!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5,488 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
2. கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக கோவில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் புதிதாக 1,20,821 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,20,821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் ஒரேநாளில் 1,41,472 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,41,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. புதுச்சேரி எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு- விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்
தமிழக எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அப்போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.