தேசிய செய்திகள்

ரெயில் விபத்து: நிவாரணம் அறிவிப்பு + "||" + Guwahati-Bikaner Express derailment in Jalpaiguri, West Bengal: Indian Railways

ரெயில் விபத்து: நிவாரணம் அறிவிப்பு

ரெயில் விபத்து: நிவாரணம் அறிவிப்பு
மே.வங்கம் ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கிச் சென்ற குவஹாட்டி - பிகானர் விரைவு ரெயில் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.  இதில்  20 -க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும்  சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என கூறியுள்ளது. 

இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநில அதிகாரிகள் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.