மேற்கு வங்காளத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு


மேற்கு வங்காளத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
x
தினத்தந்தி 13 Jan 2022 6:29 PM GMT (Updated: 2022-01-13T23:59:17+05:30)

மேற்கு வங்காளத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.புதுடெல்லி,

ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கி சென்று கொண்டிருந்த கவுகாத்தி - பிகானிர் விரைவு ரெயில் மேற்கு வங்காள மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் தோமோஹானி பகுதியில் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறும்போது, மொத்தம் 12 ரெயில் பெட்டிகள் இந்த விபத்தில் சிக்கி தடம் புரண்டுள்ளன.  இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.  50 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 2 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.


Next Story