காஷ்மீர் என்கவுண்ட்டர்; பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை


காஷ்மீர் என்கவுண்ட்டர்; பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை
x
தினத்தந்தி 13 Jan 2022 8:06 PM GMT (Updated: 2022-01-14T01:36:20+05:30)

காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதியை படையினர் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பரிவான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.  பாபர் பாய் என்ற பெயரை கொண்ட அந்த பயங்கரகாதி கடந்த 2018ம் ஆண்டு முதல் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த என்கவுண்ட்டருக்கு முன்பு, குடிமக்களை பாதுகாப்புடன் வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்.  இந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் அதிகாரி ஒருவர், 3 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
Next Story