தேசிய செய்திகள்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 125 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பிரியங்கா காந்தி..! + "||" + Uttar Pradesh Assembly elections: Priyanka Gandhi has released the list of 125 candidates

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 125 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பிரியங்கா காந்தி..!

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 125 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பிரியங்கா காந்தி..!
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்காக 125 காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பிரியங்கா வெளியிட்டார்.
புதுடெல்லி, 

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பா.ஜனதா ஆளும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

இந்தநிலையில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 125 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் இதை வெளியிட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று பிரியங்கா ஏற்கனவே கூறியிருந்தார். அதற்கேற்ப இப்பட்டியலில் பெண்களுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, 50 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.

அதுபோல், இன்னும் 50 வேட்பாளர்கள், இளைஞர்கள் ஆவர். உன்னா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான இளம்பெண்ணின் தாயார் ஆஷா சிங், உன்னா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பட்டியலை வெளியிட்ட பிறகு பிரியங்கா நிருபர்களிடம் கூறியதாவது:-

40 சதவீத இடங்களை பெண்களும், 40 சதவீத இடங்களை இளைஞர்களுக்கும் ஒதுக்கியதன் மூலம் காங்கிரஸ் கட்சி புதிய, வரலாற்று சிறப்புமிக்க தொடக்கத்தை படைத்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த காலங்களில் யார் யார் தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் போராடினார்களோ, அவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளோம். அவர்கள் அதிகார மையத்தில் இடம்பிடிக்க தேவையான வலிமையை காங்கிரஸ் அளிக்கும். இத்தேர்தலில் நாங்கள் எதிர்மறை பிரசாரத்தில் ஈடுபட மாட்டோம். மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி, மாநிலத்தின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக நேர்மறை பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு பிரியங்கா கூறினார்.

‘‘உ.பி. தேர்தலில் போட்டியிடுவீர்களா?’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு பிரியங்கா பதில் அளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. 3-வது நாளாக உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா செய்தார். புதிதாக ஒரு பா.ஜனதா எம்.எல்.ஏ., கட்சியை விட்டு விலகினார்.
2. உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா செய்தார்.
3. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி - சரத்பவார்
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளதாக சரத்பவார் தெரிவித்துள்ளார்.
4. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி போட்டி இல்லை..!
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி போட்டி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5. உத்தரபிரதேசத்தில் மேலும் 3 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் விலகல்
உத்தரபிரதேசத்தில் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளனர்.