தேசிய செய்திகள்

சூனியக்காரி பட்டம் சூட்டி மூதாட்டியை அடித்து, தீ வைத்து கொளுத்திய நபர் + "||" + The man who beat the old woman to the point of witchcraft and set her on fire

சூனியக்காரி பட்டம் சூட்டி மூதாட்டியை அடித்து, தீ வைத்து கொளுத்திய நபர்

சூனியக்காரி பட்டம் சூட்டி மூதாட்டியை அடித்து, தீ வைத்து கொளுத்திய நபர்
ஜார்க்கண்டில் சூனியக்காரி என கூறி மூதாட்டியை அடித்து, துன்புறுத்தி, தீ வைத்து கொளுத்திய அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

சிம்டெகா,


ஜார்க்கண்டின் சிம்டெகா நகரின் தீத்தைடேஞ்சர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜாரியோ தேவி (வயது 60).  கடந்த புதன்கிழமை இவர், புளோரன்ஸ் டங்டங் என்பவரின் மனைவியின் இறுதி சடங்கு விருந்தில் கலந்து கொண்டார்.

இந்த விருந்து முடிந்தவுடன், ஜாரியோவை சூனியக்காரி என கூறியதுடன், அவரது மனைவி மரணத்திற்கு ஜாரியோவே காரணம் என புளோரன்ஸ் கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து, அவருடன் சேர்ந்து மூதாட்டியை அடித்து, துன்புறுத்தியுள்ளனர்.

இதன்பின்பு, ஒரு கட்டத்தில் ஜாரியோ மீது தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.  சூழ்ந்திருந்த கிராமவாசிகள் அவரை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் புளோரன்ஸ் மற்றும் 5 பேரை கைது செய்தனர்.  அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் மற்றொரு சம்பவம்; இந்து கோவிலை சுத்தியலால் அடித்து, உடைத்த மர்ம நபர்
பாகிஸ்தானில் இந்து கடவுள் சிலையை சுத்தியலால் அடித்து, உடைத்து கோவிலை சேதப்படுத்தி உள்ளனர்.
2. ஆப்கானிஸ்தானில் சீக்கிய குருத்வாராவை அடித்து, சேதப்படுத்திய தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் சீக்கிய குருத்வாராவுக்குள் நுழைந்த ஆயுதமேந்திய தலீபான்கள் அதனை அடித்து சேதப்படுத்தினர்.
3. டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தானின் பாவத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்து சாதனை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் பாவத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.