கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் நாளை முதல் பள்ளிகள் மூடல்...!


கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் நாளை முதல் பள்ளிகள் மூடல்...!
x
தினத்தந்தி 14 Jan 2022 8:26 AM GMT (Updated: 14 Jan 2022 8:26 AM GMT)

மத்தியபிரதேசத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வரும் 31-ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளிகள் 50 சதவிகித இருக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மாணவ/மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து நேரடி வகுப்புகளில் பங்கேற்று வந்தனர்.

இதற்கிடையில், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 31 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 652 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று உத்தரவிட்டுள்ளார். 

நாளை முதல் 31-ம் தேதி வரை 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து தனியார், அரசு பள்ளிகளும் மூடப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இன்று நடைபெறும் மகா சங்கராந்தி நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை.

Next Story