தேசிய செய்திகள்

சிக்கிமில் மேலும் 385- பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு + "||" + Sikkim reports 385 fresh COVID-19 cases, one more fatality

சிக்கிமில் மேலும் 385- பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு

சிக்கிமில் மேலும் 385- பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 31,785- ஆக உயர்ந்துள்ளது.
காங்டாக், 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் கடந்த 24 மணி நேரத்தில் 385- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34,030- ஆக உயர்ந்துள்ளது. சிக்கிமில் நேற்று பாதிப்பு 294- ஆக பதிவாகி இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 91 கூடியுள்ளது.  

கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 411- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை  1,417- ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 31,785- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1,745-மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 2 லட்சத்து 89 ஆயிரத்து 692-  ஆக உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா
துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. மேலும் 177 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. கர்நாடகத்தில் 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை- மந்திரி சுதாகர் பேட்டி
மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
4. தமிழகத்தில் சிறிது குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
5. கர்நாடகாவை அதிரவைத்த கொரோனா..தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து796- ஆக உள்ளது.