டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்கிறது; ஆனாலும் அச்சம் வேண்டாம்; கெஜ்ரிவால் ஆறுதல்


டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்கிறது; ஆனாலும் அச்சம் வேண்டாம்;  கெஜ்ரிவால் ஆறுதல்
x
தினத்தந்தி 14 Jan 2022 1:15 PM GMT (Updated: 14 Jan 2022 1:15 PM GMT)

கொரோனாவை எதிர்கொள்ள டெல்லி முழு வீச்சில் தயாராக உள்ளது. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் மிகக் குறைவாகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது; - “ அச்சப்பட வேண்டியதில்லை. கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வந்தாலும், இதில் இருவேறு வழிகள் கிடையாது. ஒமைக்ரான் திரிபு கொரோனா மிகவும் வேகமாக பரவி தொற்றை ஏற்படுத்தக்கூடியது. 

தொற்று பாதிப்பு விகிதம் 29 சதவீதத்தை கடந்தாலும் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.  கொரோனாவை எதிர்கொள்ள டெல்லி முழு வீச்சில் தயாராக உள்ளது. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை” என்றார். 


Next Story