பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Jan 2022 3:30 PM GMT (Updated: 14 Jan 2022 3:30 PM GMT)

2022-2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31-ந்தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.

இதன்படி ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  5 மாநில சட்டமன்றத் தேர்தல் வருவதால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வானது ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல் இரண்டாவது அமர்வு கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் 2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ந்தேதி நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ம் தேதி, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story