டெல்லியில் மிக நீண்ட பனி அடர்ந்த நாள் இன்று பதிவு


டெல்லியில் மிக நீண்ட பனி அடர்ந்த நாள் இன்று பதிவு
x
தினத்தந்தி 14 Jan 2022 5:33 PM GMT (Updated: 2022-01-14T23:03:16+05:30)

டெல்லியில் நடப்பு பருவத்தின் மிக நீண்ட பனி அடர்ந்த நாள் இன்று காணப்பட்டது.புதுடெல்லி,


டெல்லியில் குளிர்காலத்தின் ஒரு பகுதியாக பல இடங்களில் பனி படர்ந்து காணப்படுகிறது.  அதிகாலையில் அடர்பனியால் தெளிவற்ற வானிலை காணப்படுகிறது.  இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்ல வேண்டி உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் நடப்பு பருவத்தின் மிக நீண்ட பனி அடர்ந்த நாள் இன்று காணப்பட்டது.  இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பகற்பொழுதில் சூரிய ஒளி மிக குறைவாக இருந்ததும் நண்பகலில் வடமேற்கில் இருந்து மணிக்கு 8 முதல் 12 கி.மீ. வேகத்தில் லேசான காற்று வீசியதும் நாள் முழுவதும் பனி அடர்ந்து இருப்பதற்கான காரணங்களாக அமைந்தன என தெரிவித்து உள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு டெல்லியில் அடர் முதல் மித அளவிலான பனி படர்ந்து காணப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story