பாஜகவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது - மத்திய மந்திரி பேட்டி


பாஜகவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது - மத்திய மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 14 Jan 2022 6:21 PM GMT (Updated: 2022-01-14T23:51:03+05:30)

பாஜகவுக்கு எல்லா இடங்களிலிருந்தும் ஆதரவு கிடைக்கிறது என்று மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறினார்.

புதுடெல்லி,

உத்தரப்பிரதேசத்தில் மூன்று நாட்களில் மூன்று மந்திரிகள் மற்றும் பாஜகவின் ஆறு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது குறித்து மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:-

உத்தரப் பிரதேசத்தில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது பெரிய விஷயம் இல்லை. மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜகவுக்கு மாநிலம் முழுவதும் ஆதரவு கிடைத்து மீண்டும் ஆட்சிக்கு வரும்.

தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் பாஜகவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது. மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். உ.பி., உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story