தேசிய செய்திகள்

இந்தியா: நேற்று 2.64 லட்சம், இன்று 2.68 லட்சம் - தொடர்ந்து உயரும் தினசரி கொரோனா பாதிப்பு...! + "||" + India Coronavirus Report on 14th January

இந்தியா: நேற்று 2.64 லட்சம், இன்று 2.68 லட்சம் - தொடர்ந்து உயரும் தினசரி கொரோனா பாதிப்பு...!

இந்தியா: நேற்று 2.64 லட்சம், இன்று 2.68 லட்சம் - தொடர்ந்து உயரும் தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.64 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது நேற்றைய பாதிப்பான 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 2 லட்சத்து 47 ஆயிரத்து 417-ஐ விட அதிகமாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 47 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 85 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 156 கோடியே 2 லட்சத்து 51 ஆயிரத்து 117 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26.52 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32.38 கோடியாக அதிகரித்துள்ளது.
2. கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் நாளை முதல் பள்ளிகள் மூடல்...!
மத்தியபிரதேசத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வரும் 31-ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3. இந்தியா: நேற்று 2.47 லட்சம், இன்று 2.64 லட்சம் - உச்சமடையும் தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.47 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26.39 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32.06 கோடியாக அதிகரித்துள்ளது.
5. வண்டலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு: கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
வண்டலூரில் உள்ள பேருந்து நிலையத்தில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பஸ்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.