தேசிய செய்திகள்

பீகார்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு + "||" + 5 die after consuming spurious liquor in Bihar

பீகார்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு

பீகார்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர்.
பாட்னா,

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் சோட்டா பஹாரி என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்துள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்த அனைவரும் நேற்று இரவு தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் கிராமத்தின் தெருவிலேயே படுத்து உறங்கியுள்ளனர். அவர்களில் சிலர் இன்று காலை வெகுநேரம் ஆகியும் கண் விழிக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவர்களை எழுப்பியுள்ளனர். 

அப்போது, 5 தூக்கத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தனர். அந்த இருவரையும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓடும் ரெயிலில் ஏற முயன்ற ரெயில் நிலைய அதிகாரி தண்டவாளத்தில் விழுந்து உயிரிழப்பு
ஓடும் ரெயிலில் ஏற முயன்ற ரெயில் நிலைய அதிகாரி தண்டவாளத்தில் தவறி விழுந்து ரெயிலின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்,
2. கொரோனா எதிரொலி: பீகாரில் 1- 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடல்
கொரோனா பரவல் எதிரொலியாக : பீகாரில் 1- 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.
3. போலீஸ் ரோந்து வாகனம் மீது கவிழ்ந்த லாரி - 3 போலீசார் உயிரிழப்பு
போலீஸ் ரோந்து வாகனம் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்துள்ளனர்.
4. பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜிதன் ராம் மஞ்சிக்கு கொரோனா தொற்று
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி ஜிதன் ராம் மன் ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பீகார் தொழிற்சாலை விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு
பீகார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.