5 மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த ஜனவரி 22-ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு


5 மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த  ஜனவரி 22-ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2022 12:37 PM GMT (Updated: 2022-01-15T18:07:44+05:30)

அதிகபட்சமாக 300 நபர்கள் அல்லது 50% இருக்கையுடன் உள் அரங்குகளில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. 

வரும் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை தேர்தல் நடைபெற உள்ளது. கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாகவும் தேர்தல் நடை பெறுகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

ஜனவரி 15 ஆம் தேதி பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், 5 மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடையை   ஜனவரி 22ஆம் தேதி வரை  தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. 

மேலும், அதிகபட்சமாக 300 நபர்கள் அல்லது 50% இருக்கையுடன் உள் அரங்குகளில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று பரவல் குறையாததால் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. 


Next Story